The Indian Times

இயக்குனர் மிஸ்கின் உடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்…அட சூப்பர் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

Advertisement

சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.ஆரம்பத்தில் .ஜோடி சீசன் நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் பொழுது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பல உள்ளனர்.சிவகார்த்திகேயனின் இந்த திறமையை தெரிந்துகொண்ட விஜய் டிவி அவருக்காகவே அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது.

Advertisement

தற்போது முன்னணி நடிகர் ஆன சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்துஇயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மடோன் அஸ்வின் உள்ளிட்ட இயக்குனர்களின் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.இதில் இயக்குனர் மடோனா அஸ்வின் உடன் இவர் நடிக்க உள்ள படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஸ்கின் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த கூட்டணி மட்டும் உறுதியானால் நிச்சம் இப்படம் மாபெரும் ஹிட் அடிக்கும் என்பதில் மாற்றமே இல்லை

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in