The Indian Times

இந்தியன் தாத்தா போல் மாறிய ஷாருக்கான்..அட்லீ இயக்கும் ஜவான் TITLE TEASER OUTNOW

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தேறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் மிரட்டலான திரை கதையுடன் ஷாருக்கானை சந்தித்துள்ளார்.அவரிடம் கதை கூறவே கதை பிடித்துப்போன ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார்.படப்பிடிப்பு வேலைகள் உடனே தொடங்கப்பட்டது.ஆனால் கொரோனா நிலவரம் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டு வந்த நிலையில் தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Advertisement

இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.தற்போது இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.ஜவான் என படத்திற்கு பெயரிட்டுள்ளது படக்குழு ,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் அடுத்த வருடம் ஜூன் 2 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இப்படம் ஹிந்தி ,தமிழ்,தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.விஜய் ரசிகர்கள் அட்லீக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தமிழ் நடிகர்களை வைத்து அடுத்த படத்தினை இயக்குவார் இதன் மூலம் தமிழ் சினிமா அடுத்தகட்டம் நோக்கி நகரும் என நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தான் இருந்தாலும் தமிழ் இயக்குனர் பாலிவுட் நடிகரை வைத்து இயக்குவது பெருமையான விஷயமாகத்தான் அமைந்துள்ளது

Embed video credits : RED CHILLIES ENTERTAINMENT 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in