The Indian Times

தமிழ் கெட்ட வார்த்தை தான் பேசுவேன்…நடிகை ப்ரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் ப்ரியா,பின்னர் அங்கிருந்து நாடகத்தில் வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து நாடகத்தில் நடிக்க தொடங்கினார்.இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது எங்கும் கிடைக்கவில்லை,இதற்கான சரியான நேரத்தினை நோக்கி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.இதன்மூலம் ப்ரியா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.பல இளைஞர்கள் மனதினையும் கொள்ளையடித்தார் ப்ரியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் பிரியாவிற்கு தொடர்ச்சியாக வர தொடங்கியது,அதன்படி மேயாத மான் என்ற படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படம் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இப்படத்தினை தொடர்ந்து தொடர்ச்சியாக படம் நடிக்க தொடங்கினார்.இவரது கதாபாத்திரத்திற்கு படங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஓ மணப்பெண்ணே திரைப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

Advertisement

தற்போது இவருக்கு அடுத்ததாக எஸ் ஜே சூர்யாவின் பொம்மை படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார்.அண்மையில் வெளியான ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இவர் முன் அளித்த பேட்டி ஒன்றில்,நீங்கள் கெட்ட வார்த்தை பேசுவீங்களா என கேட்கப்பட்டது,அதற்கு ப்ரியா ஆமாம் பேசுவேன் ,அதுவும் தமிழில் தான்,நாமெல்லாம் தமிழர்கள் தானே என பேட்டியில் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in