ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி.. சித்து கொடுத்த செம்ம Surprise Gift | Shreya Siddhu
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்னும் தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சின்னத்திரை ஜோடிகளில் இவர்களும் ஒருவர். தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர் எனவே இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயாவிற்கு பிரியா என்ற தங்கை உண்டு. சித்து தனது மச்சினிச்சி பிரியாவுடன் சேர்ந்து செய்யும் லூட்டிகள், மனைவி ஸ்ரேயாவுடன் செய்யும் குறும்பு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவது வழக்கமான ஒன்றுதான்.

நடிகர் சித்து தற்போது ராஜா ராணி 2 என்ற தொடரில் நடித்து வருகிறார். இது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழ் நாடகத் தொடராகும். இந்த நிகழ்ச்சி 2 சீசன்களைக் கொண்டுள்ளது. முதல் சீசனில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்தனர், இரண்டாவது சீசன் இந்தி சீரியலான தியா அவுர் பாத்தி ஹம் ஸ்டார்பிளஸின் ரீமேக் ஆகும். இதில் நடிகர் சித்து சித்துடன் முதல் சீசனில் தோன்றிய ஆல்யா மானசா நடிக்கிறார். Youtube Video Embed Code Credits: sidhu & shreya Youtube channel

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் குறும்புகளை பார்த்து ரசிக்க ஒரு தனி பட்டாளமே உள்ளது என கூறலாம். சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடலுக்கு இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை கடந்து உள்ளது. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து morris garages என்ற வகை காரை வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு சென்னையில் 23 லட்சம் என கூறப்படுகிறது. தன் மனைவியின் பிறந்த நாள் பரிசாக இதை சித்து வாங்கியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the video below…
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in