The Indian Times

பைக் ஸ்டண்ட்..முதுகு தண்டு வடத்துல ஏற்பட்ட Fracture..அஜித்தின் உடல்நிலை பற்றி டாக்டர் சொன்ன உண்மை

வலிமை திரைப்படம் வெளியாகி திரை அரங்குகளை அதிர செய்துள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கிய இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரண்டரை ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் வெளியானது. இது பல நல்ல மற்றும் கெட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் மிக நீளமாக இருப்பதால் ரொம்ப போர் அடிக்கிறது என்று வந்த விமர்சனத்தின் அடிப்படையில் சில காட்சிகளை படக்குழு நீக்கியும் உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. படத்தில் வரும் அம்மா-மகன் சென்டிமெண்ட் காட்சிகள் பலருக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Advertisement

இந்த படத்தில் போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார் அஜீத்குமார். போதை ஒழிப்பை மையமாக கொண்டு கதை நகர்கிறது. இந்த படத்தை பற்றியும், கதை பற்றியும், அஜீத் அவர்களை தனிப்பட்ட முறையிலும் தாக்கி ப்ளூ சட்டொ மாறன் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்வினைகள் வந்தன. படம் முழுவதும் பைக் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கும் ஆனால் கதை ஓடவில்லை என்று விமர்சித்து இருந்தார். ஆனால் அந்த பைக் ஓட்டுவதற்குப் பின்னால் இருந்த கஷ்டத்தையும், அதனால் அஜீத்துக்கு ஏற்பட்ட அறுவை சிகிச்சைகள் குறித்தும் அவரது டாக்டர் ஒருவர் விளக்கியுள்ளார். Youtube Video Code Embed Credits: Behindwoods

Advertisement

அஜித் பைக் காட்சிகளில் நடிக்கும் பொழுது ஒரி முறைதான் விழுவதை நீங்கள் பார்த்துள்ளீர்கள் ஆனால் அவர் அத்தனை முறை விழுந்து அந்த காட்சியை எடுத்தார். அதனால் அவருக்கு உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், முதுகுதண்டு வடம், தோள், காலில் என உடலின் அனைத்துப் பகுதிகளலும் அறுவை சிகிச்சை நடந்துள்ளது எனவும் அவரது டாக்டர் கூறினார். ஒரு முறை அவரது முதுகு தண்டுவட பிரச்சினையால் அவரது உடல் முழுவதும் செயல்படாமல் போய் இருக்கும் ஆனால் அவரது தன்னம்பிக்கையால் அவர் இன்றும் நடத்துக் கொண்டிருக்கிறார் என்றும் டாக்டர் தெரிவித்தார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in