The Indian Times

“ஐ லவ் யூ சுனிதா” பேட்டியின் நடுவே சுனிதாவிடம் காதலை சொன்ன நண்பன்.. Cute Video | Sunitha

விஜய் டிவியில் ஒளிப்பாரகி வரும் ரியாலிட்டி ஷோ என்றாலே அதற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். கோமாளிகளுடன் இணைந்து குக்குகள் சமைக்க படும் பாடு எப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்துவிடும். இதில் பங்கேற்ற பலரும் இன்று திரைத்துறையில் முத்திரை பதித்து வருகின்றனர். புகழ் ஏற்கனவே தல அஜீத்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து வருகிறார். இவர் மட்டுமில்லாமல் சுனிதா, சிவாங்கி, பாலா போன்ற எல்லோரும் படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகின்றனர். கடந்த சீசனில் வந்த அஸ்வின் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

Advertisement

இதில் சுனிதா சற்று வித்தியாசமானவர் ஏனெனில் இவருக்கு தாய்மொழி தமிழ் இல்லை. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமை பூர்வீகமாக கொண்ட இவர் வேலைத்தேடி சென்னை வந்துள்ளார். நடனக் கலைஞரானா இவர் விஜய் டிவியில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின் இவரது புகழ் உச்சத்தை அடைந்தது. தமிழ் சரிவர பேசத் தெரியாமல் இவர் செய்யும் காமெடி வேற லெவலில் இருக்கும். Youtube video code embed credits: Galatta

Advertisement


இவர் சுனிதா எக்பிரஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி பல லட்சம் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார். தற்போது சுனிதா சென்னையில் Fans மீட் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். அதில் சுனிதாவின் நண்பரான சர்ப்ரைஸாக கலந்து கொண்டார். அவரைப் பார்த்த சுனிதா மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். அப்போது திடீரென அவர் சுனிதாவிற்கு தன் காதலை சொல்லி ரோஸ் மற்றும் மோதிரம் கொடுத்தார். இதனால் திகைத்துப் போன சுனிதா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். அந்த அழகான வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

https://youtu.be/hzjFVlbo6BU?t=752

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in