The Indian Times

தனுஷை தாக்கி பேசிய நடிகர் சிம்புவால் கோலிவுட்டில் சலசலப்பு

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார்.

Advertisement

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா படம் பெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஐசரி கணேசன் இப்படத்தினை தயாரித்துள்ளார்,

Advertisement

இப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.அதன்படி அண்மையில் சிம்பு அளித்த பேட்டி ஒன்றில் ,நான் ஹாலிவுட் படத்தில் நடித்துவிட்டால் ஹாலிவுட் நடிகர் ஆகி விடுவேன்,அடுத்து என்ன? தற்போது எல்லாரும் பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என நினைத்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள் எனக்கு பெரிய ஆள் என்றால் என்ன என்பது தெரியவில்லை எனது வேலையே நான் சிறப்பாக செய்தால் அதுதான் என்னை பெரிய ஆளாக உயர்த்தும் என பேசியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷை தான் சிம்பு தாக்கி பேசியுள்ளார் என கூறி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in