TR BACK…AMERICA-விலும் PUNCH பேசிய T.ராஜேந்தர்….TR-ஐ நேரில் சந்தித்த நடிகர் நெப்போலியன் மற்றும் பாண்டிராஜ்

தமிழ் சினிமாவில் இயக்குனர்,நடிகர்,இசையமைப்பாளர்,கதை ஆசிரியர் என அனைத்தையும் செய்தவர் T.ராஜேந்தர்.இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகர்,இசையமைப்பாளர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்த இவருக்கு இப்படம் மக்களிடம் பெரும் வெற்றியை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை தன்வசம் வைக்க தொடங்கினார். அந்த காலத்திலேயே பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற நற்பெயரும் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா சுவாமி தரிசனம்

TR BACK...AMERICA-விலும் PUNCH பேசிய T.ராஜேந்தர்....TR-ஐ நேரில் சந்தித்த நடிகர் நெப்போலியன் மற்றும் பாண்டிராஜ் 1

விளம்பரம்

இவர் அண்மையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த செய்தி வெளியாகியதும் திரை உலகம் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு என்ன ஆனது என்று பதறினர்.இந்த செய்தி நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. தற்போது உடல்நிலை சரியில்லாததால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் இவர்.நடிகர் நெப்போலியன் மற்றும் நடிகர் பாண்டிராஜ் இருவரும் அமெரிக்காவில் கலைநிகழ்ச்சிக்காக சென்றிருந்த பொழுது T.ராஜேந்தர் அவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

TR BACK...AMERICA-விலும் PUNCH பேசிய T.ராஜேந்தர்....TR-ஐ நேரில் சந்தித்த நடிகர் நெப்போலியன் மற்றும் பாண்டிராஜ் 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த சந்திப்பின் பொழுது T.ராஜேந்தர் தனது ஸ்டைலில் பன்ச் வசனங்களை தெறிக்கவிட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை நடிகர் நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு,இன்று அமெரிக்கா நியூயார்க்கில் சிகிச்சை பெற்றுவரும் T.ராஜேந்தர் அவர்களை நேரில் சந்தித்ததாகவும்,அவர் நன்றாக உள்ளார் யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்து வீடியோ வெளியிட்டதற்கு நெப்போலியனுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.இதோ அந்த வீடியோ

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment