The Indian Times

மகளுடன் மிரட்டல் ஆட்டம் போட்ட ஸ்ரீதர் மாஸ்டர்… தெறிக்கவிட்டுடீங்க மாஸ்டர்

சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் உள்ள பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றளவு பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர்.அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

எதார்த்தமாக மாஸ்டர் ஸ்ரீதர் இவர் மகளுடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இந்த வீடியோ மிக பெரிதளவு வைரலாகியது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் சென்னையில் சொந்தமாக டேன்ஸ் ஸ்டூடியோ வைத்து மாணவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.இவரை போல இவரது மகள் அக்ஷதாவும் நடனத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்.இதனால் இருவரும் இணைந்து தொடர்ந்து வீடியோ பதிவிட்டு பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை திரட்டியுள்ளனர்.

Advertisement

கடந்த சில நாட்களாக இருவரும் இணைந்து நடனமாடி வீடியோ வெளியிடாமல் இருந்தனர்.எப்பொழுது இவர்கள் வீடியோ வரும் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது நடனமாடி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.காக்கா கதை கேட்டுருக்கேன் என மெதுவான பாடலுக்கு கூட மிரட்டலான நடனம் போட்டு அசத்தியுள்ளார் அப்பா பொண்ணு.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.எப்பொழுது இவர்கள் வீடியோ போடுவார்கள் என இவர்கள் ரசிகர்கள் கூட்டம் ஆவலாக காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இன்று இவர்கள் நடனமாடி பதிவிட்ட வீடியோ ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in