The Indian Times

சமந்தாவுக்கு TOUGH கொடுக்கும் ஷாலு சம்மு….முரட்டுத்தனமா உடற்பயிற்சி பண்றாங்களே

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஷாலு சம்மு,நடிப்பின் மேல் கொண்ட ஈடுபாடால் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.பல நிறுவனங்கள் ஏறி இறங்கிய இவருக்கு இறுதியாக வாய்ப்பு சிவகார்த்திகேயன் படத்தில் கிடைத்தது.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியாகிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாரசிகர்களிடம் இருந்து கிடைத்தது.அதை தொடர்ந்து காஞ்சிவரம் படத்தில் துணை நடிகையாக நடித்து சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.தற்போது தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஷாலு . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,திருடுபயலே ,இரண்டாம் குத்து,மிஸ்டர் லோக்கல் என மேலும் சில படங்களில் நடித்து உள்ளார். மேலும் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தும் வருகிறார்.இவர் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் மிக பிரபலம் ஆகியவர்.இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இவரின் இந்த ரீல்ஸ் வீடியோவை காணவே பெரும் கூட்டம் உள்ளது.மேலும் போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து படவாய்ப்பிற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களையும் கவர்ந்து வருகிறார்.இதனால் இளைஞர்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடியிருந்து வருகின்றனர்.

Advertisement

நடிகை என்றாலே முதலில் செய்ய கூடிய விஷயம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பது தான் அப்பொழுதுதான் படவாய்ப்பு அவர்களை தேடி வரும்.இதனால் தான் நடிகைகள் வெறித்தனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.அதேபோல ஷாலுவும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஷாலு,எந்த ஜிம் இது நாங்களும் சேரப்போறோம் என நகைச்சுவையாக பதிவிட்டு வீடியோவை லைக் செய்து வருகின்றார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in