The Indian Times

மாறுவேடத்தில் பொது இடத்திற்கு ஒளிந்து வந்த சாய்பல்லவி…ஏன் தெரியுமா??வைரலாகும் வீடியோ

தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி.இவருக்கென கதாநாயகர்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆரம்பத்தில் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக உயர்ந்துள்ளார்.இவர் முதன் முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,தெலுங்கு படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Advertisement

தற்போது இவர் முகத்தினை மூடிக்கொண்டு மாறுவேடத்தில் பொது இடத்தில் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அண்மையில் நடிகர் மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய சர்க்காரு வாரி பட்டா படத்தினை ரசிகர்களுடன் காண மாறுவேடத்தில் சென்று மீண்டும் திரும்பிய பொழுது வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in