முதல் மனைவியின் மீது பொய் வழக்கு பதிவிட்ட இசையமைப்பாளர் இமான்..உண்மையை போட்டுடைத்த மனைவி மோனிகா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இமான்.தமிழில் தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் .இப்படத்தில் நல்ல வரவேற்பு இமானுக்கு கிடைத்தது.அதை தொடர்ந்து இவரது இசையில் வெளியாகிய விசில் படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க செய்தார்.அன்று தொடர்ந்து இன்று வரை பல முன்னணி பிரபலங்கள் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  SELFI எடுக்க வந்த ரசிகர் போனை தள்ளிவிட்ட நடிகர் ஷாருக்கான்

முதல் மனைவியின் மீது பொய் வழக்கு பதிவிட்ட இசையமைப்பாளர் இமான்..உண்மையை போட்டுடைத்த மனைவி மோனிகா 1

விளம்பரம்

இவர் மோனிகா என்பவரை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.இந்நிலையில் இமானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்தனர்.இந்நிலையில் இமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி மோனிகா மீது புகார் ஒன்றை அளித்தார்,அதன்படி முன்னாள் மனைவி மோனிகா தனது குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என சொல்லி புது பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து வாங்கி இருக்கிறார் என கூறி மனைவி மற்றும் பாஸ்போர்ட் அதிகாரிகள் மீது புகார் தெரிவித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  வரலக்ஷ்மி சரத்குமார் மிரட்டும் மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் TEASER இதோ...

முதல் மனைவியின் மீது பொய் வழக்கு பதிவிட்ட இசையமைப்பாளர் இமான்..உண்மையை போட்டுடைத்த மனைவி மோனிகா 2

விளம்பரம்

இதுகுறித்து மோனிகா கூறியதாவது,குழந்தைகளை வைத்திருக்கும் தாய்க்கு அவர்களது பாஸ்போர்ட் வைத்திருக்கும் உரிமை இருக்கிறது,அதன் அடிப்படையில் இமானிடம் சென்று பாஸ்போர்ட் கேட்டதற்கு வீடு மாறும் பொழுது தொலைந்துவிட்டதாக கூறினார்.அதன்பின்னரே விதிமுறைகளின் படி புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் முன்னாள் மனைவியின் பெயரை கெடுக்க இப்படி பொய்யான வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக மோனிகா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment