The Indian Times

கையபுடிச்சிக்கோ செல்லம்…காதலியுடன் கரம் கோர்த்து வரும் CWC புகழ்

பல கனவுகளுடன் சென்னை வந்தவர்களில் ஒருவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இதனை சரியாக பயன்படுத்திவிட வேண்டும் என கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்தார்.பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை கவர்ந்தார்.குறிப்பாக அவருக்கு மட்டுமே தனி பெண் குரல் உண்டு அதில் பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.அங்கிருந்து அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.

Advertisement

மக்களை சிரிக்கவைப்பதற்காகவே உழைத்து வரும் இவருக்கு தற்போது படங்களில் வாய்ப்பு கிடைத்து காமெடியனாக நடித்து வருகிறார்.மேலும் ஹீரோவாகவும் ஜூ கீப்பர் என்ற படத்தில் அறிமுகமாக உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இவர் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வந்ததாக அண்மையில் அறிவித்தார்.தற்போது தனது காதலியின் கரம்பிடித்து தொகுப்பாளினி அகல்யா கல்யாணத்தில் கலந்துகொண்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த புகழ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

https://youtu.be/YLPlLgpcF8Y

Embed video credits : Behindwoodstv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in