இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அனல் பறக்கும் தி வாரியர் படத்தின் TRAILER …

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லிங்குசாமி.இவர் தனது முதல் படத்திலேயே மூன்று முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளை வைத்து படம் இயக்கினார்.நடிகர் மம்மூட்டி,முரளி,அப்பாஸ் நடிப்பில் வெளியாகிய ஆனந்தம் படம் தான் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய முதல் படம் இப்படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் மாதவனை வைத்து ரன் படத்தினை இயக்கி சினிமாவின் உச்சத்திற்கே சென்றார்.தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து நல்ல வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களை தனது வசம் தக்க வைத்தவர் லிங்குசாமி.சண்டைக்கோழி,பீமா,பையா என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.படம் இயக்குவது மட்டுமில்லாமல் தரமான படங்களை தயாரித்தும் உள்ளார் லிங்கு சாமி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அனல் பறக்கும் தி வாரியர் படத்தின் TRAILER ... 1

விளம்பரம்

இவர் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.இந்த படத்தினால் இவர் ரசிகர்களின் கேலி மற்றும் கிண்டலுக்கு அதிகமாக ஆளாகினர்.பல வெற்றிப்படங்களை கொடுத்த லிங்குசாமி ஒரு படத்தின் தோல்வியால் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகினார்.இதன் மூலம் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் இவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் களம் இறங்கியுள்ள லிங்கு சாமி, இவர் நடிகர் ராம் போதினியை வைத்து தி வாரியார் படத்தினை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்,வில்லனாக ஆதி நடித்துள்ளார்,தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அனல் பறக்கும் தி வாரியர் படத்தின் TRAILER ... 2

விளம்பரம்

அண்மையில் இப்படத்தில் இருந்து புல்லட் பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்து அசத்தியது.பலரும் இப்பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து வைரலாக்கினர்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ட்ரைலரை பார்க்கும்பொழுதே படம் மிகுந்த ஆக்ஷன் என்பது தெரிகிறது.இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ட்ரைலரை ராம் போதினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Aditya Music Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment