The Indian Times

கையில் துப்பாக்கி உடன் மிரட்டலாக அமர்ந்திருக்கும் அஜித்..துணிவு FIRST LOOK POSTER

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.

Advertisement

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இப்படத்திற்கு இடைவெளி விட்டு அவர் அண்மையில் வெளிநாடுகளில் பைக் ரைடு செய்து வந்தார்.எல்லாவற்றையும் முடித்து விட்டு தற்போது மீண்டும் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார் அஜித்குமார்.

Advertisement

தற்போது அஜித்தின் 61வது படத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தினை மூன்றாவது முறையாக வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்,இப்படத்திற்கு துணிவு என படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.போஸ்டரில் அஜித் கையில் துப்பாக்கியுடன் மாஸ் ஆக அமர்ந்திருப்பது ரசிகர்களிடம் கூடுதல் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in