The Indian Times

லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு காயம்..கதறி அழுது சுருண்டு விழுந்த விஷால்

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகராக மட்டுமில்லாமல் அடுத்தகட்டமாக தயாரிப்பாளராகவும் களம் இறங்கி அதிலும் வெற்றி பெற்று வருகிறார்.மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.தற்போது தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வீரமே வாகை சூடும் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் இயக்குனராக அவதாரம் எடுத்து மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகிய துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தினையும் இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.விஷாலின் இயக்கத்தினை காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.

Advertisement

தற்போது விஷால் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்க்கு சாம் இசையமைக்கிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று படப்பிடிப்பின் பொழுது விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.காட்சிகள் முடியும் வரை வலியை தங்கிவிட்டு முடிந்த உடன் சுருண்டு விழுந்து அழுதுள்ளார்.இது பார்ப்பவர்களை மிகவும் கஷ்டமாக்கியுள்ளது.இதே படப்பிடிப்பில் முன்னதாக விஷாலுக்கு அடிபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது இது இரண்டாவது முறையாகும்.

Embed video credits : vishal film factory

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in