The Indian Times

முதன் முதலாக மேடை கச்சேரியில் பாடிய தளபதி விஜய்… ப்பா மனுஷன் என்னம்மா பாடுறாரு…

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தமிழில் மட்டும் இல்லாமல் கேரளா தெலுங்கு போன்ற சினிமாக்களிலும் இவருக்கு பெரும் வரவேற்பும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.இதுவே தளபதி விஜயின் பலம் ஆகும்.ஆரம்பகட்டத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளான விஜய் தற்போது பல பத்திரிக்கை நிறுவனங்களும் இவர் ஒரு பேட்டி நம்மிடம் அளிக்க மாட்டாரா என ஏங்கி வருகின்றனர்.இகழ்ந்தவர்கள் கீழே இருக்க இகழப்பட்டவர் மேலே சென்றார் ,அந்தளவிற்கு சினிமாவில் உயர்ந்து கொடிகட்டி தனக்கான ராஜ்யத்தினை அமைத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தற்போது தெலுங்கிலும் கால் தடம் பதிக்க உள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவரது படம் நேரிடையாக வெளியாக உள்ளது.இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவர் நடிகர் மட்டுமில்லாமல் சினிமாவில் பாடல்களும் பாடி வருகிறார்.ஆரம்பகாலத்தில் பிற நடிகர்களுக்கும் பாடல் பாடிய விஜய் தற்போது தனது படங்களுக்கு மட்டும் பாடல் பாடி வருகிறார்.

Advertisement

1994 ஆம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்ற பாடல் பாடி சினிமாவில் பாடகராகவும் அறிமுகம் ஆகினார்.விஜய் குரலில் வெளியாகிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.தற்போது வரை தளபதி விஜய் குரலில் வெளியாகும் பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.இதுவரை தளபதி விஜய் தமிழ் சினிமாவில் 35க்கும் அதிகமான பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.தற்போது தளபதி விஜய் மேடை நிகழ்ச்சிகளில் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை தளபதி ரசிகர்கள் வெகுவாக இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in