The Indian Times

80வது பிறந்தநாளுக்காக இசையமைப்பாளர் இளையராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஆறிலிருந்து அறுபது வரை இவரது இசையை ரசித்து கேட்காதவர்கள் எவரும் இல்லை.அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து 1976 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இளையராஜா.இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களுக்கு இசையமைக்க உள்ளார்.இவருக்கு 2010 ஆம் ஆண்டு உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இவரது மகன் யுவன் சங்கர் ராஜா,கார்த்திக் மற்றும் மகள் பவதாரிணி மற்றும் தம்பி கங்கை அமரன் ,அவரது மகன்கள் எல்லோரும் சினிமாவில் பிரபலங்களாக வலம் வருகின்றனர். இவரது மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் தந்தையை போல பெரிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை வலம் வருகிறார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இளையராஜா இவர் இசையமைத்த பல பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.அண்மையில் இவர் இசையில் மாமனிதன் படம் வெளியாகியது.தற்போது இவருக்கு அடுத்து இசையமைத்த விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன் படம் வெளியாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னாள் இளையராஜா தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மற்றும் மதுரையில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.இந்த இசை நிகழ்ச்சிக்கு மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் மேலும் 80வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜைகளையும் செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு பெருமளவு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in