The Indian Times

முடி முடி பகை முடி… ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் 2nd SINGLE வெளியாகியது

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் பின்னணி நடனம் ஆடுபவராக அறிமுகம் ஆகினார்.சினிமா கனவுகளை கையில் வைத்துக்கொண்டு கடினமாக போராடினார்.இவர் முதல் முறையாக வெள்ளித்திரையில் தோன்றிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய உழைப்பாளி. இந்த படத்தில் படத்தில் பின்னணி நடனம் ஆடுபவராக திரையில் வந்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக முன்னேறி 1999ஆம் ஆண்டு வெளியாகிய ஸ்பீட் டான்சர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார்.பின்னர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகிய உன்னை கொடு என்னை தருவேன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய அற்புதம் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படி நடன இயக்குனரில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று இயக்குனர் மற்றும் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்,சினிமாவில் வர துடிக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்சுக்கு அதிகாரம்,ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது,இப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.காஞ்சனா 4வது பாகத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸை காணவில்லை என்பதால் இப்படத்தின் மூலம் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

தற்போது இவர் ருத்ரன் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் முதல் பாடலான பாடாதா பாட்டெல்லாம் என்ற ரீமிக்ஸ் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான பகை முடி பாடல் வெளியாகியுள்ளது.இப்பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.ஜிவி இசை பாடலுக்கு பெரும் பலம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Embed video credits : 5star creations

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in