The Indian Times

தன் வீட்டு தோட்டத்தை சுற்றிக்காட்டிய சிவகார்த்திகேயன்! Viral video

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கே சவால் விடும் அளவிற்கு உச்சத்தை அடைந்துள்ளவர் சிவகார்த்திகேயன். பல இன்னல்களை கடந்து , கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் தொலைக்காட்சி தொகுப்பாளரும் சினிமா நடிகராகலாம், அதுவும் சாதாரண நடிகராக இல்லாமல் மாஸ் ஹீரோவாக உச்சத்தையே அடையலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஓரு சிறந்த உதாரணம்.

Advertisement

இவரை பாராட்டும் விதமாக தமிழக அரசு அளித்த கலைமாமணி விருது ஒரு சாமானியனை சாதனையாளராக மாற்றியுள்ளது. இந்நிலையில் இவர் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவத்தி இயக்கி வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் இன்று பலர் வேலையில்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இந்த கொரோனா விழிப்புணர்விற்காக பல பிரபலங்கள் நடிகர்கள் , நடிகைகள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் கொரோனா விழிப்புணர்விற்காக வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய வீட்டு தோட்டத்தை மக்களுக்கு வெளிக்காட்டியுள்ளார். வீட்டிற்கு வெளியே ஒரு காய்கறி தோட்டத்தை உருவாக்கி பராமரித்து வருகிறார் சிவா. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/watch?v=EUuDSZHKBUk

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in