The Indian Times

கடவுளே ஹரிஷ் கல்யாணே…BIGGBOSS ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளுக்கு தங்கதேர் இழுத்த ரசிகர்கள்

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அரிது அரிது ,சட்டப்படி குற்றம் என்ற படங்கள் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தரவில்லை.இருந்தாலும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார் ஹரிஷ் கல்யாண்.அதன்படி இவர் நடித்த வில் அம்பு படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் ஓரளவிற்கு அறிமுகம் ஆகினார்.இந்த வரவேற்பு போதாது என காத்துக்கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது அதிர்ஷ்டம் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்,இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிக பிரபலமாகினார்.நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடித்த ஓ மணப்பெண்ணே படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து நூறு கோடி வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஹரிஷ்

Advertisement

இந்நிலையில் ஜூன் 29 ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள்.இதனையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மந்திரத்தினை சேர்ந்தவர்கள் இவரது பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள பூங்கா முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ரசிகர்கள் வழிபாடு செய்துள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சினிமா ரசிகர்கள் ஹரிஷ் கல்யாணுக்கும் இவ்வளவு பாசமான ரசிகர்கள் உள்ளார்களா என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in