The Indian Times

தமிழகத்தில் மட்டும் விக்ரம் இத்தனை கோடி வசூலா…அடேங்கப்பா ..ஒட்டுமொத்தமாக சம்பாதிச்சிட்டாரே ஆண்டவர்

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.திரையரங்கில் 25 நாட்களை தாண்டியும் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டு வருகிறது.

Advertisement

உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.படம் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

Advertisement

விக்ரம் உலகம் முழுவதும் வெற்றி வாகை சூடி வருகிறது.இதனால் ஆண்டவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் சுமார் 400 கோடி வரை வசூல் படைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது படம் வெளியாகி 5 வாரங்கள் ஆகியும் தமிழகத்தில் 150 திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 175கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படம் ஜூலை 8 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது,இருப்பினும் திரையரங்கிலும் பட வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in