The Indian Times

பாலா உங்க JOKE அடிக்கேன் பாருங்க..COOK WITH COMALI நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் பார்த்திபன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர்.

Advertisement

தற்போது இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.வாரம் வாரம் கோமாளிகள் அசத்தலான வேடங்களில் வந்து அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி வருகின்றனர்.அதேபோல் இந்த வாரமும் பிரபல நடிகர்களின் வேடங்களில் வந்து மக்களை சிரிக்க வைத்துள்ளனர்.இந்த வார ப்ரோமோக்கள் மக்களிடம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்காக கலந்துகொண்டுள்ளார்.மேலும் கோமாளிகளுடன் இவர் பேசி கலகலப்பாக மொத்த செட்டையும் கலகலப்பாக ஆக்கியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : Vijaytelvision

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in