The Indian Times

புஷ்பா 2 படத்தில் இணையும் முன்னணி தமிழ் கதாநாயகன்…அப்போ மஜா தான்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் புஷ்பா 2.இப்படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடித்துள்ளார்.இறுதி கட்டத்தில் பகத் பாசில் போலீசாக வந்து கலக்கி இருப்பார்.இப்படம் உருவாகும் பொழுதே இரண்டு பாகங்களாக தான் தயார் செய்ய இயக்குனர் திட்டமிட்டுள்ளார் தற்போது முதல் பாகத்தினை எடுத்து முடித்து படக்குழு வெளியிட்டுள்ளது.இந்நிலையில் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் ஆக பகத் பாசில் தான் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.அல்லு அர்ஜுனுக்கு வில்லன் ஆக படம் முழுவதும் நடிகர் விஜய் சேதுபதி தான் வருவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது,இந்நிலையில் இப்படத்தில் முன்னணி தமிழ் கதாநாயகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி படத்தில் புதிய போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு வில்லன் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தமிழில் கதாநாயகன் மற்றும் வில்லன் ஆக அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி.இவர் வில்லனாக நடித்த அனைத்து படமும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.அண்மையில் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.கமல்ஹாசன் என்ட்ரிக்கு வரும் சத்தத்தினை விட விஜய் சேதுபதி என்ட்ரிக்கு வரும் ரசிகர்களின் சத்தம் தான் அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு கிடைத்த வரவேற்பு இந்திய சினிமாவுக்கே தெரிந்ததால் அவரை பல மொழி சினிமா இயக்குனர்களும் தங்களது படங்களில் வில்லனாக நடிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதன்படி தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளார் விஜய் சேதுபதி,இதில் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதும் கதாபாத்திரமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in