“ரம் பம் ஆரம்பம்” 22 வருஷம் முன்பே வந்த பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நடிகர்கள்

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பேத்தியை பள்ளியில் சென்று பார்த்த நடிகர் சரத்குமார் ராதிகா

"ரம் பம் ஆரம்பம்" 22 வருஷம் முன்பே வந்த பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நடிகர்கள் 1

விளம்பரம்

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.இவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அவந்திகா,அனந்திகா என்ற இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.தற்போது இயக்குனர் நடிகர் என இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து அசத்தி வருகிறார். பல படங்களில் கதாநாயகனாக அசத்தி வரும் வேலையில் படங்களை இயக்கியும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நம்ம DD வர வர CUTE ஆகிட்டே போறாங்களே...

"ரம் பம் ஆரம்பம்" 22 வருஷம் முன்பே வந்த பாட்டுக்கு குத்தாட்டம் போடும் நடிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் ஜெய் ,ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து காபி வித் காதல் படத்தினை இயக்கி வருகிறார்.இதனை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் நிறுவனங் தயாரித்து வருகிறது.யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் டிடி,மாளவிகா,அம்ரிதா ஐயர்,ரைசா,ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தில் 22 வருடத்திற்கு முன்னாள் வந்த மைக்கல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்றுள்ள ரம்பம் பம் பாடலை யுவன் சங்கர் ராஜா இதில் வைத்துள்ளார்.தற்போது இப்பாடலை நாளை படக்குழு வெளியிட உள்ளது.தற்போது பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நவராத்திரிக்கு நடிகை அமலாபால் ஈஷா மையத்தில் சாமி தரிசனம்

விளம்பரம்

Embed video credits : U1 Records

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment