Latest News Updates by The Indian Times

Hot News

காலா படத்திற்கான தடையை உச்சநீதிமன்றம் மறுப்பு

காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி உதவ வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்த நிலையில், காலா திரைப்படம் நாளை கர்நாடக மாநிலத்தில் 130 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று ரஜினி கூறியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.காலா படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவை எச்சரித்துள்ளன.

இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் காலா திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனாலும் காலா படத்தை வெளியிட தற்போது சரியான சூழல் கர்நாடகாவில் இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார்.இந்த நிலையில் சென்னையில் பேசிய ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையே தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அப்படி இருக்கையில் திரைப்படங்கள் வெளியாக உறுதுணையாக இருக்க வேண்டிய கர்நாடக பிலிம்சேம்பர் காலாவுக்கு எதிராக இருப்பதை ஏற்க முடியாது என்று ரஜினி கூறியுள்ளார்.

இந்நிலையில் கன்னட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கிடையே காலா திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர் கனக்புரா ஸ்ரீனிவாஸ் முடிவு செய்துள்ளார். நாளை 130 திரையரங்குகளில் காலா படம் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே காலா படத்தின் கதைக்கு உரிமை கோரி ராஜசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ளது. மேலும் காலா படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறிவிட்து.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top