நடிகர் விஜய் சேதுபதி சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் 19(1)(a) படத்தின் TEASER

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

நடிகர் விஜய் சேதுபதி சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் 19(1)(a) படத்தின் TEASER 1

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார்.கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.தெலுங்கில் புஷ்பா படத்தில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராயன் பட நிகழ்ச்சியில் செம்ம ஸ்டைலாக கலந்துகொண்ட நடிகர் தனுஷ்

நடிகர் விஜய் சேதுபதி சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் 19(1)(a) படத்தின் TEASER 2

விளம்பரம்

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் இந்து இயக்கத்தில் 19(1)(a) என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.இத்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.இப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.சண்டை காட்சிகள் இல்லாமல்,பன்ச் வசனங்கள் இல்லாமல் எதார்த்தமாக விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து அசத்தியுள்ளர்.இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

விளம்பரம்

Embed video credits : Disney plus hotstar

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment