The Indian Times

தங்கமே மாமாவ வெட்கப்படாம பாரு…விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண PHOTOSHOOT

சினிமா உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஆனது சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது..பாலிவுட் முதல் கோலிவுட் வரை என அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர்.நானும் ரவுடி தான் என்ற படத்தின் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கதாநாயகியாக வைத்து இயக்கிய நிலையில்,இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு ஆனது நாளடைவில் காதலாக மாறியது.இந்த காதல் எப்பொழுது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Pic Courtesy – Netflix India Instagram Handle
Advertisement

திருமண வீடியோ முழுவதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் திருமணத்தில் அனுமதிக்கப்படவில்லை மேலும் கலந்துகொள்பவர்கள் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.இவர்களது திருமணத்தில் பாதுகாப்பிற்காக 80 பவுன்சர்கள் மற்றும் போலீஸ்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.மேலும் பத்திரிகைகளில் உள்ள கியூ ஆர் கோடுகள் மூலம் தான் அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.இவ்வாறு பெரும் கட்டுப்பாடுகளுடன் இவர்கள் திருமணம் நடைபெற்றது.இவர்களின் திருமண வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் அண்மையில் விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்களை நெட்பிளிக்ஸ் அனுமதி இல்லாமல் வெளியிட்டதால் நெட்பிளிக்ஸ் அவர்களுடனான ஒப்பந்தத்தினை முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியது.

Pic Courtesy – Netflix India Instagram Handle

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ நெட்பிளிக்சில் வெளியாக இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் திருமணம் முடிந்த பிறகு எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஜோடிகள் என கருத்து தெரிவித்து வீடியோவிற்காக ஆவலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.பல வதந்திகளுக்கும் மத்தியில் வீடியோ வருமா வராதா என குளம்பிய ரசிகர்களுக்காகவே நெட்பிளிக்ஸ் வெளியிட்ட இந்த அறிவிப்பு ஆனது நயன்தாரா ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in