The Indian Times

வேஷ்டி சட்டையில் கெத்தாக GRAYMAN பட நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.இதற்கு இவரது விடா முயற்சியும் கடின உழைப்பே காரணம்.ஆரம்பத்தில் பல எதிர்மறை விமர்சனங்கள் கேலிகள் அனைத்தையும் பெற்று தன்னை தானே செதுக்கி இன்று இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் .இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் இருந்து ஹிந்திக்கு சென்ற நடிகர்கள் சிலர் அதில் இவரும் ஒருவர்.அமிதாப்பச்சன் உடன் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் இன்று உயர்ந்துள்ளார்.தற்போது ஹாலிவுட் வரை நடிகர் தனுஷ் கொடி பறக்கிறது. இவர் நடித்துள்ள க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தனுஷ் தெலுங்கிலும் நேரடியாக கால்தடத்தினை பதிக்க உள்ளார்.இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தனுஷ் சார் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் தமிழில் வாத்தி என வெளியாக உள்ளது.அதே சமயம் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Advertisement

தற்போது இவர் அவென்ஜர்ஸ் படத்தின் இயக்குனர்களான அந்தோணி மற்றும் ஜோ ரூஸ்ஸோ இயக்கத்தில் க்ரே மேன் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.இது தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உள்ளதால் ரசிகர்கள் மனம் நெகிழ்ந்துள்ளனர்.அண்மையில் இவர் இப்படவிழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தார் ,இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.தற்போது படம் நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று மும்பையில் படத்தின் பிரீமியர் காட்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.நடிகர் தனுஷ் இந்த நிகழ்ச்சிக்கு வேஷ்டி சட்டையில் சென்று அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

https://www.youtube.com/shorts/_Qal1W9qICw

Embed video credits : KXD SHORTS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in