The Indian Times

20 வருசத்துக்கு முன்னாடி வந்த தமிழ் எங்களுக்கு பெருசு..நடிப்பில் மிரட்டிய BIGG BOSS இசைவாணி

ஆண்கள் மட்டும் தான் கானா பாட வேண்டுமா ஏன் பெண்கள் பாடக்கூடாதா பெண்களாலும் முடியும் என கானா பாடகியாக உருவெடுத்தவர் இசைவாணி. கானா பாடல்களில் சிறந்து விளங்குபவர் இவர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தனது குழுவுடன் கானா பாடி அசத்தியவர் இவர்.இவர் பாடும் கானா பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மேல் காதல் உண்டு இவருக்கு கானா மேல் தான் அதிக காதல்.கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சினிமாவிலும் தற்போது சில கானா பாடல்களை பாடி வருகிறார் இசைவாணி.பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்.நீண்ட நாட்கள் உள்ளே இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 49 வது நாளே குறைவாக வாக்கு வித்தியாசத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

Advertisement

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஸ்ருதிஹாசன் 7 ஆம் அறிவு படத்தில் பேசிய நீளமான வசனத்தினை அப்படியே பேசி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் ரசிகர்கள் சூப்பராக நடிக்கிறீங்க அக்கா என கூறி கமெண்ட் செய்து வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு பெரிய படவாய்ப்புகள் இசைவாணிக்கு அமையவில்லை இருந்தாலும் சினிமாவில் சாதிக்க கடினமாக போராடி வருகிறார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in