தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம்.காரணம் தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததால்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.சாதாரண இயக்குனர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கியவர் இயக்குனர் மணிரத்தினம்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றி இவரின் வீட்டு வாசலில் நின்றது.
மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன்.இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்நிலையில் இன்று திடீரென இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவரை பரிசோதத்தில் கொரோனா இல்லை என உறுதியாகியுள்ளது.இதுகுறித்து அவரது மனைவி நடிகை சுஹாசினி கூறியதாவது,மணிரத்னத்துக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்,மேலும் என்னுடைய அப்பா அம்மா வயதானவர்கள் என்பதால் நாங்கள் மருத்துவமனையில் தனிமையில் இருக்கிறோம்,மணிரத்னம் நன்றாக உள்ளார் என தெரிவித்துள்ளார்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in