சந்திரமுகி SHOOTING-ல் நகைச்சுவையால் எல்லோரையும் கலகலப்பாக்கிய வைகை புயல்..

நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழகத்தில் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு மக்கள் மனதில் நிறைந்துள்ளார் வடிவேலு.இவரின் நகைச்சுவைகள் தான் பலருக்கும் மருந்தாகி வருகிறது. இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே சினிமாவில் உள்ளது.காரணம் தனது எதார்த்தமான பேச்சு மற்றும் ஆக்ஷன்களால் மக்களை சிரிக்கவைப்பதில் இவர் வல்லவர் என்பதால்.தற்போது பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் இன்று வரை வடிவேலு இடத்தினை பிடித்தவர்கள் எவரும் இல்லை.நகைச்சுவையின் நிரந்தர புலிகேசி மன்னனாக இன்று உள்ளார்.அவர் படங்களில் நடித்தாலும் சரி நடிக்கவில்லை என்றாலும் சரி அவருக்கான இடம் தனி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

சந்திரமுகி SHOOTING-ல் நகைச்சுவையால் எல்லோரையும் கலகலப்பாக்கிய வைகை புயல்.. 1

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சந்திரமுகி SHOOTING-ல் நகைச்சுவையால் எல்லோரையும் கலகலப்பாக்கிய வைகை புயல்.. 2

விளம்பரம்

இந்நிலையில் இருவருக்கும் இடையேயான பிரச்சனைகள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் வைகை புயல் சினிமாவை தாக்க தொடங்கியுள்ளது.வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து அசத்தி வருகிறார்.ஹீரோ மற்றும் காமெடியன் என இரண்டு ரூட்டுகளிலும் மக்களை மகிழ்விக்க வந்துகொண்டிருக்கிறார் வடிவேலு.தற்போது சந்திரமுகி 2 ஆம் பாக படப்பிடிப்பில் மைசூரில் இருக்கும் இவர் அங்கு சுறா படத்தில் இவர் செய்த நகைச்சுவை ஒன்றை செய்த்து காண்பித்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.பல ரசிகர்களும் உங்களை இப்படி பார்க்க தான் ஆசைப்பட்டோம்,நீங்க மீண்டும் திரையில் வந்தால் போதும் என உணர்ச்சிபூர்வமாக வீடியோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் கோவிலுக்கு சென்ற பாடகர் செந்தில் ராஜலக்ஷ்மி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment