The Indian Times

வயசானா என்ன நான் அம்மு அபிராமியும் Sight அடிப்பேன் கிரேஸையும் Sight அடிப்பேன்…மனோபாலா பேட்டி

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் மனோபாலா.இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.1982 ஆம் ஆண்டு ஆகாயகங்கை என்ற படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.20க்கும் அதிகமான படங்களை தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்,அதில் ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றியும் பெற்றுள்ளது.தற்போது முழுநேரம் நகைச்சுவை நடிகராக பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.பல முன்னனி கதாநாயகர்களுடனும் இவர் நடித்துவிட்டார்.1994 ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடித்து சினிமாவில் தனது முகத்தினை முதல் முறையாக காமித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரின் நகைச்சுவைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி , இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை காண்பித்தார்.இறுதி போட்டி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார்.வைல்ட் கார்டு போட்டிகளில் கூட இவர் கலந்துகொள்ளவில்லை இதனால் இவர் ரசிகர்கள் சோகமாகினார்கள்.

தற்போது இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் குக் வித் கோமாளி அனுபவங்களை குறித்து பகிர்ந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் புகழ்,அருண் எல்லாரும் அம்மு அபிராமியை தான் சைட் அடிப்பார்கள்,நீங்கள் என்ன பண்ணுவீர்கள் என தொகுப்பாளர் கேட்டதற்கு , வயசானால் என்ன அந்த கிரேஸையும் சைட் அடிப்பேன் அம்மு அபிராமியையும் சைட் அடிப்பேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

https://youtu.be/sRIayqIRtSY

Embed video credits : BehindwoodsTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in