The Indian Times

பழைய புன்னகையுடன் வெளிநாட்டில் கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை மீனா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மீனா.இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.தமிழில் இவருக்கு என் ராசாவின் மனசிலே படம் மாபெரும் வெற்றியையும் வரவேற்பினையும் பெற்றுத்தந்தது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி,குணசித்திர நடிகை என சினிமாவை ஒரு கலக்கு கலக்கி வருபவர் மீனா.அண்மையில் பல நாட்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.அம்மாவை போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமாகி அசத்திவிட்டார்.நடிகை மீனாவின் கணவர் சில நாட்களுக்கு முன்னர் தவறிவிட்டார்.இதனால் கவலையாக இருந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.

Advertisement

தற்போது மேலும் மீனா படங்களில் நடிக்க தொடங்கியதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டனர்.இந்நிலையில் மீனா வெளிநாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.அங்குள்ள சாலைகளில் நடந்து சென்று அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடத்தினை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை மீண்டும் பார்க்கத்தான் ஆசைப்பட்டோம்,இப்படியே சந்தோசமாக இருங்கள் என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in