The Indian Times

ரஞ்சிதமே பாடலுக்கு சன்னி லியோன் உடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட GP முத்து

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போட தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் நிகழ்ச்சியில் இருந்து குடும்பத்தை காணாமல் இருக்க முடியாது என கூறி வெளியேறினார்

Advertisement

மேலும் நடிகை சன்னி லியோனின் ஓ மை கோஷ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நேற்று சன்னி லியோன் உடன் ஜிபி முத்து கலந்துகொண்டுள்ளார்.அங்கு ரஞ்சிதமே பாடலுக்கு தளபதி போல ஸ்டெப் போட்டு சன்னி லியோன் உடன் நடனமாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in