The Indian Times

மனைவியின் 50வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக அமெரிக்காவில் கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.இவர் வெள்ளித்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் வாய்ப்பு தேடி அலைந்த பொழுது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி 1991 ஆம் ஆண்டு வெளியாகிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகனாக நடித்து வந்தார்.கதாநாயகன் மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவை அசத்திவந்தார்.இவர் வில்லனாக நடித்த எஜமான் படம் மாபெரும் வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. இவர் நடித்த சீவலப்பேரி பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்று 90 களில் முன்னணி நடிகராக உருவெடுத்து தமிழ் சினிமாவை வலம் வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நெப்போலியன் தமிழ் படங்களில் நடிப்பது குறைவாக உள்ளது.தனது முழு கவனத்தினையும் பிசினஸில் செலுத்தி வருகிறார்.இதனால் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.இன்று வரை இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு நடிப்பினால் மக்கள் மனதினை கவர்ந்தார் நெப்போலியன்.அமெரிக்காவில் இருக்கும் இவர் படவாய்ப்பு வந்தால் கதையினை கேட்டு பிடித்திருந்தால் தமிழகத்திற்கு வந்து நடிப்பார்.அப்படி இவர் நடித்து அண்மையில் வெளியாகிய படம் ஹிப்ஹாப் தமிழா நடித்த அன்பறிவு திரைப்படம்.இவர் அமெரிக்காவில் இருந்து இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பதிவிடும் வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisement

தற்போது பிரபல யுடியூபர் இர்பான் அண்மையில் அமெரிக்கா சென்று நெப்போலியன் வீட்டை சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்டார் இந்த வீடியோ பெருமளவு வைரலாகியது. தற்போது நெப்போலியன் தனது மனைவியின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இர்பானை அழைத்துள்ளார்.இர்பானும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.நெப்போலியன் தனது மனைவியின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோவை இர்பான் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் நெப்போலியன் மனைவிக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Embed video credits : IRFAN VIEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in