The Indian Times

பசங்க பட கதாநாயகனை காதலிக்கும் பிரபல தமிழ் சீரியல் நடிகை

2009 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகிய பசங்க அறிமுகம் ஆகியவர் கிஷோர்.இப்படத்தில் அன்பு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பினை இப்படத்தில் பெற்றார்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கோலி சோடா படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இருப்பினும் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் என்பது குறைவாகவே இருந்து வருகிறது.

Advertisement

இவர் தற்போது சின்னத்திரை பிரபல நடிகையை காதலிப்பதாக கூறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற தொடரில் நடித்து அறிமுகம் ஆகி நல்ல வரவேற்ப்பினை பெற்றவர் ப்ரீத்தி.இந்த நாடகத்தினை தொடர்ந்து லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, கோபுரங்கள் சாய்வதில்லை மற்றும் பிரியமானவளே போன்ற தொடர்களில் நடித்துள்ளார் . தற்போது இருவரும் காதலித்து வருவதாக நடிகர் கிஷோர் கூறியுள்ளார்.

Advertisement

இருவரும் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு,காதலி ப்ரீத்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி,இருவரும் அடுத்த வருடம் முதல் கணவன் மனைவியாக எல்லா பிறந்தநாளையும் கொண்டாடலாம் என கூறியுள்ளார்.இந்த பதிவில் ரசிகர்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in