மொட்டை மாடியில் குத்தாட்டம் போட்ட ஏஜென்ட் டீனா…சும்மா நெருப்பு மாதிரி ஆடுறாங்க சார்

உலகநாயகன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் தான் வசந்தி.இந்த படத்தில் இவர் காட்சிக்கு திரையரங்கே விசிலடித்து சத்தம் போட்டு அதிரவிட்டது.இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் பயணம் செய்கிறார்.ஆனால் விக்ரம் படத்தின் மூலம் தான் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட வசந்தி சினிமாவில் நடன கலைஞராக அறிமுகம் ஆகியவர்.கடின உழைப்பினால் முன்னேறி முன்னணி நடன இயக்குனர்களுக்கு உதவி நடன இயக்குனராக பணியாற்றியவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்

மொட்டை மாடியில் குத்தாட்டம் போட்ட ஏஜென்ட் டீனா...சும்மா நெருப்பு மாதிரி ஆடுறாங்க சார் 1

விளம்பரம்

சினிமாவில் விஜய் அஜித் மற்றும் சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.பல மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் வசந்தி.தளபதி விஜயின் பகவதி படத்தில் இடம்பெற்ற அல்லு அல்லு பாடலுக்கும் ,அதே சமயம் வில்லன் படத்தில் அடிச்சா நெத்தி அடி என்ற பாடலிலும் நடனம் ஆடி அசத்தியிருப்பார்.அண்மையில் வலிமை படத்தில் வேறமாறி பாடலுக்கு கூட நடனம் இயக்கம் செய்துள்ளார் வசந்தி.தற்போது இவர் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் உடன் பணியாற்றி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடிய குந்தவை த்ரிஷா

மொட்டை மாடியில் குத்தாட்டம் போட்ட ஏஜென்ட் டீனா...சும்மா நெருப்பு மாதிரி ஆடுறாங்க சார் 2

விளம்பரம்

30 வருடங்களாக சினிமாவில் இருந்த இவர் விக்ரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ளார்.இந்த படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதை தொடர்ந்து மேலும் இவர் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,தற்போது மொட்டை மாடியில் போட்ட குத்தாட்டம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் வேறெலெவெல் எனர்ஜி உங்களுக்கு என கருத்துக்களை தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர்.இந்த வயதிலும் இளைஞர்களை விட வேகமாக இவரால் மட்டுமே ஆட முடியும் என்பது இந்த வீடியோவை பார்க்கும் பொழுது தெரிகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தேவதையாகவே மாறிய குக் வித் கோமாளி சிவாங்கி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment