அடேங்கப்பா…கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலேயே AGENT TINA நடிச்சிருக்காங்களா?

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ,காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது விக்ரம்.படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்று தான் தமிழ் சினிமா மீண்டும் உயர்ந்துவிட்டது.காரணம் சமீப காலமாக வெளியாகிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை ,தூங்கிய தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிறுத்திவிட்டார் என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  லூசு பெண்ணே பாடலை பாடி மேடையில் வெறித்தனமாக நடனமாடிய சிம்பு....

அடேங்கப்பா...கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலேயே AGENT TINA நடிச்சிருக்காங்களா? 1

விளம்பரம்

அனிருத் இசையில் உருவாகிய பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது என்றே கூறலாம்.கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.திரையரங்கில் ரசிகர்களை இப்பாடல் குத்தாட்டம் போட வைத்துள்ளது.அந்த அளவிற்கு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெளியாகி நல்ல வசூலை உலகம் முழுவதும் பெற்று வருவதால் மகிழ்ச்சியில் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு புதிய கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார் மேலும் அவரது 13 துணை இயக்குனர்களுக்கும் பைக்குகளை வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக அளித்துள்ளார் கமல்ஹாசன்.உலகம் முழுவதும் பெரும் வசூல் சாதனையை படைத்தது வருகிறது விக்ரம்

கட்டாயம் படிக்கவும்  புலியை பிடிக்க புலியை தான் கொண்டு வரணும்... விக்ரம் பிரபு மிரட்டும் RAID ட்ரைலர் இதோ

அடேங்கப்பா...கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலேயே AGENT TINA நடிச்சிருக்காங்களா? 2

விளம்பரம்

இப்படத்தில் ஏஜென்ட் டீனா என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.யாரும் எதிர்பார்க்காத விதம் திடீரென்று ஆக்ஷனில் இறங்கி திரையரங்கில் கைத்தட்டினை பெற்றார் ஏஜென்ட் டீனா.இந்த கதாபாத்திரம் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இந்த ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்தவர் முன்னதாக உலகநாயகன் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியாகிய அன்பே சிவம் படத்திலும் நடித்துள்ளார்.அவரது நாடக குழுவில் ஒருத்தராக இப்படத்தில் நடித்துள்ளார்.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் காளை பட LOOK-ற்கு மாறிய நடிகர் சிம்பு.. வெறித்தனமாக அடுத்தப்படத்திற்கு தயாராகிய சிம்பு

அடேங்கப்பா...கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்திலேயே AGENT TINA நடிச்சிருக்காங்களா? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment