The Indian Times

வேட்டி கட்டிட்டு மிரட்டல் நடனம் போட்ட vijay tv புகழ்..Pugazh dance verelevel

நாள்தோறும் சினிமா கனவுகளுடன் குறைந்தது 10 பேராவது சென்னைக்கு வருகை தருகின்றனர்.ஆனால் அவர்கள் அங்கு வெற்றிபெற்றார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.காரணம் பாதி முயற்சியிலேயே திரும்புவது ஆகும்.பல இளைஞர்களில் ஒருவராக தான் பல கனவுகளுடன் சென்னை வந்தவர் புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என வெறியுடன் போராடி வந்தார்.ஏவிஎம் ஸ்டூடியோ எதிரே உள்ள கார் வாஷிங் கடையில் பணிபுரிந்துகொண்டே வாய்ப்பு தேடினார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதனை சரியாக பயன்படுத்திவிட வேண்டும் என கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்தார்.பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை கவர்ந்தார்.குறிப்பாக அவருக்கு மட்டுமே தனி பெண் குரல் உண்டு அதில் பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.தொடர்ந்து மனம் தளராமல் பெண் வேடம் அணிந்து மக்களை சிரிக்க வைத்தார் புகழ்.தன்னை தனியாக காட்ட வேண்டும் என எண்ணி தான் போட்டுள்ள லேடி கெட்டப்பிலேயே அங்கிருந்து அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.தற்போது பிரபலமாகி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நடித்து வருகிறார் மேலும் கதாநாயகனாகவும் புதிய படத்தில் நடித்துள்ளார் புகழ்.

Advertisement

இப்படி பல திறமை கொண்ட புகழுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை பின்தொடருகின்றார்கள்.இவர் எந்த வீடியோ பதிவிட்டாலும் அதற்கு ஆதரவு அளித்து அதனை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி விடுவார்கள் இவரது ரசிகர்கள்.பல இளைஞர்களுக்கும் இவர் தற்போது முன் மாதிரியாக விளங்குகிறார்.இவர் தற்போது வேட்டியில் நடிகர் சிம்புவின் தமிழன்டா பாடலுக்கு முரட்டு குத்து போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அண்ணா செம்ம மாஸ் என கூறி கருத்துக்களை தெரிவித்து லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

https://youtu.be/ZB3vnL1TB-w

Embed video credits : behindwoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in