முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து பெற்ற உலகநாயகன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்து இருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில்,நரேன் ,காளிதாஸ் ஜெயராம் என பலரும் நடித்துள்ளனர்.ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட்டுள்ளார் .இப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது விக்ரம்.படத்தினை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கூறுவது ஒன்றே ஒன்று தான் தமிழ் சினிமா மீண்டும் உயர்ந்துவிட்டது.காரணம் சமீப காலமாக வெளியாகிய பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை ,தூங்கிய தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிறுத்திவிட்டார் என்று கூறி வருகின்றனர் ரசிகர்கள் .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து பெற்ற உலகநாயகன் 1

விளம்பரம்

அனிருத் இசையில் உருவாகிய பாடல்கள் பெரும் ஹிட் அடித்துள்ளது.பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது என்றே கூறலாம்.கமல் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.திரையரங்கில் ரசிகர்களை இப்பாடல் குத்தாட்டம் போட வைத்துள்ளது.அந்த அளவிற்கு பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படம் வெளியாகி நல்ல வசூலை உலகம் முழுவதும் பெற்று வருவதால் மகிழ்ச்சியில் கமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு புதிய கார் ஒன்றினை பரிசாக அளித்துள்ளார் மேலும் அவரது 13 துணை இயக்குனர்களுக்கும் பைக்குகளை வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக அளித்துள்ளார் கமல்ஹாசன்.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விக்ரம் வெற்றிக்கு வாழ்த்து பெற்ற உலகநாயகன் 2

விளம்பரம்

தற்போது உலகம் முழுவதும் படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.அண்மையில் கமல்ஹாசன் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் கூட 300 கோடியை தொட உள்ளது விக்ரம் என அறிவித்து இருந்தார்.இதனால் உலகநாயகன் மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களும் கொண்டாடத்தில் உள்ளனர்.உலகநாயகன் தனது விக்ரம் வெற்றியை தொடர்ந்து அடுத்தகட்ட பட வேலைகளில் இறங்கியுள்ளார்.தற்பொழுது முதல்வர் ஸ்டாலினை உலகநாயகன் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.விக்ரம் படம் குறித்து முதல்வர் ஸ்டாலின் உலகநாயகனுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment