விக்ரம் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு நெகிழ்ந்த MAINA NANDHINI

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது இவர் தொகுப்பாளராகவும் அசத்தி வருகிறார்.அதன்படி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நந்தினி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

விக்ரம் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு நெகிழ்ந்த MAINA NANDHINI 1

விளம்பரம்

மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர்.இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. இவர் சின்னத்திரை நடிகர் ஆன யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களுக்கு சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  துப்பாக்கி பட நாயகி காஜல் அகர்வால் 3வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்

விக்ரம் படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டு நெகிழ்ந்த MAINA NANDHINI 2

விளம்பரம்

தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்துள்ளார் மைனா.தற்போது படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்..மேலும் வீடியோவையும் இணையத்தில் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

விளம்பரம்

Embed video credits : MYNA WINGS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment