The Indian Times

Adipoli….குழந்தைகளுடன் சேர்ந்து குழந்தையாக மாறி CUTE-ஆக நடனமாடிய மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியார்.அந்த அளவிற்கு சினிமாவில் உயரம் தொட்டுள்ளார்.இவர் முதலில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பாகிய நாடகத்தின் மூலம் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.இவர் வெள்ளித்திரையில் முதல் முதலில் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சாக்ஷ்யம் என்ற மலையாளப்படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து முழுக்க மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இதுவரை தமிழ் சினிமா பக்கம் வராத இவர்,2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த நடிப்பினால் தமிழ் சினிமாவையே தனது பக்கம் திரும்ப செய்து,இவரை இத்தனை நாள் உபயோகிக்கவில்லையே என்று இயக்குனர்கள் வருந்தும் அளவிற்கு தனது நடிப்பு திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ajith61வது படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இது இவருக்கு 2 வது தமிழ் படம் ஆகும்.

Advertisement

தற்போது இவரது கியூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி நடனமாடியுள்ளார்.இந்த வீடியோவிற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து மக்கள் இதனை இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.இவரது ரசிகர்கள் மேடம் நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க என கமெண்ட் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in