பொறுக்கிக்கும் ஒரே நீதி..போராளிக்கும் ஒரே நீதி…நெஞ்சுக்கு நீதி…Bluesattai Maran Review

பாடகர் மற்றும் காமெடி நடிகராக சினிமாவில் வலம் வந்த அருண் ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.பாடகராக இவர் பாடிய பாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல் நகைச்சுவை நடிகராகவும் மான் கராத்தே படத்தில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். இவர் இயக்குனர் ஆகவேண்டும் என லட்சியத்துடன் இயக்குனர் நெல்சனிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தர்ஷனை வைத்து கனா என்ற படத்தினை இயக்கி வெளியிட்டார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்தார் அருண்ராஜா காமராஜ்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.விமர்சனத்தின் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  படப்பிடிப்பில் குந்தவையின் குறும்புகள்... வெளியாகிய புகைப்படங்கள் இதோ

பொறுக்கிக்கும் ஒரே நீதி..போராளிக்கும் ஒரே நீதி...நெஞ்சுக்கு நீதி...Bluesattai Maran Review 1

விளம்பரம்

தற்போது கனா படம் சைனாவிலும் வெளியாகியுள்ளது.அந்த அளவிற்கு படம் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.இவர் தற்போது ஹிந்தியில் வெளியாகிய ஆர்டிகள் 15என்ற படத்தின் ரீமேக் செய்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தினை இயக்கியுள்ளார்.கதையை சிறிதளவு மாற்றியமைத்து தமிழகத்திற்கு தகுந்த மாதிரி மாற்றியமைத்து எடுத்துள்ளனர்.இப்படத்தினை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.போலீஸ் கதாபாத்திரத்தில் முதன் முதலாக உதயநிதி நடித்து அசத்தியுள்ளார்.எப்பொழுதும் ஜாலியாகவே படம் செய்து வந்த உதயநிதி மனிதன்,சைக்கோ போன்ற சீரியஸ் படங்களையும் கையிலெடுத்துள்ளார்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக சண்டை செய்யும் நடிகை பிக் பாஸ் சாக்ஷி

பொறுக்கிக்கும் ஒரே நீதி..போராளிக்கும் ஒரே நீதி...நெஞ்சுக்கு நீதி...Bluesattai Maran Review 2

விளம்பரம்

ஒவ்வொரு படம் வெளியே வரும்பொழுது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று ப்ளூசட்டை மாறன் விமர்சனத்தினை தான்.தற்போது இப்படத்தினையும் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இதில் அவர் கூறியதாவது,இந்த படத்தில் பொறுக்கிக்கும் ஒரே நீதி..போராளிக்கும் ஒரே நீதி என்பது வழங்கப்பட்டுள்ளது.ஒரிஜினல் படம் ஆன ஆர்டிகள் 15 படத்தில் இருந்து இப்படம் அரை கிலோமீட்டர் தள்ளி உள்ளது.உதயநிதி போலீஸ் வேடத்தில் ஓரளவு நல்லா நடித்துள்ளார்.மொத்தத்தில் இப்படம்,ஒரிஜினல் கதையான ஆர்டிகள் 15 படத்தினை பார்க்காமல் இதனை பார்த்தால் ஒரு வித்தியாசமான திருப்தி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ஷ்ரேயாவின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video credits : Tamiltalkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment