The Indian Times

AK61ல் கதாநாயகியாகும் கேரளா நடிகை

அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் AK61 திரைப்படம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.ஹைதராபாத்தில் இப்படத்தி படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதற்காக அஜித் குமார் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இப்படம் குறித்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.இதனால் அஜித்குமார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதே கூட்டணியில் முன்னதாக வெளியாகிய வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தினை பெற்றுள்ளது.இருப்பினும் தயாரிப்பாளருக்கு எந்த நஷ்டமும் அளிக்காமல் படம் நல்ல வசூலை பெற்றது.இந்நிலையில் இப்படத்தினை சரியாக இயக்கிவிட வேண்டும் என குறிக்கோளுடன் இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.இப்படத்தில் நிச்சயம் வினோத் அவர் சம்பவத்தினை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார்கள் என அஜித் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில்,மலையாள நடிகர் ஆன மஞ்சு வாரியார் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.முன்னதாக இவர் அசுரன் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in