The Indian Times

மருத்துவமனையில் சமந்தா!!வெளியாகியது யசோதா படத்தின் GLIMPSE காட்சிகள்

நடிகை சமந்தா தமிழ் மொழியில் அறிமுகமாகி தெலுங்கு,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் சக்கை போடு போட்டு வருகிறார்.அண்மையில் புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடிய ஊ சொல்றியா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து சமந்தாவின் புகழ் மேலும் ஓங்கியது.தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் பக்கம் செட்டில் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வீடியோ கீழே உள்ளது 

இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படத்தின் GLIMPSE காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.இதில் சமந்தா மருத்துவமனையில் இருந்து எழுந்து ஜன்னல் வழியே புறாவை பிடிக்க முயல்வதும் என குழப்பமான காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.இதனை பார்க்கும்பொழுது படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்களை குழம்ப வைத்து படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது படக்குழு

Embed video credits : Nakkheeran Studio

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in