The Indian Times

Showக்கு லீவு போட்டுட்டு காஷ்மீரில் கொண்டாட்டம் போடும் CWC ஸ்ருத்திகா

இந்திய திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் பேத்தி ஸ்ருத்திகா.இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.அதன்பின்னர் ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.

பின்னர் திருமணம் செய்துகொண்டு தனது வாழ்வினை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.இதனால் இவருக்கென சிறிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

Advertisement

தற்போது கணவருடன் லடாக் சென்றுள்ள ஸ்ருத்திகா.அங்குள்ள குளிருக்கு இதமாக சூடாக மேகி சாப்பிட்டு ,மசாலா டீ குடித்துக்கொண்டு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதில் இவரது ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.செஃப் தாமுவும் இந்த பதிவில் சூப்பர் என கமெண்ட் செய்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in