The Indian Times

நீங்க உண்மையிலேயே vere level…வளர்ப்பு தாய்க்கு பரிசளித்த கன்னிகா சினேகன்…

கே.பாலசந்தர் இயக்கிய அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் கன்னிகா.அதன்பின்னர் சரித்திரம் பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.சத்ரபதி,தேவராட்டம்,அடுத்தசாட்டை என்று பல படங்களில் நடித்துள்ளார் இவர்.அண்மையில் திருமுருகன் இயக்கத்தில் கல்யாண வீடு தொடரில் கதாநாயகியாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

Advertisement

தற்போது இவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாடலாசிரியர் சினேகனை மணந்துகொண்டார்.இவர்கள் திருமணம் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தற்போது இருவரும் தங்களது வாழ்க்கையை இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.கன்னிகா பாடல் எழுதுவதற்கு சினேகனுக்கு உதவி செய்வது போன்ற வீடியோக்களையெல்லாம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Advertisement

தற்போது இவர் பதிவிட்டுள்ள வீடியோ அனைவரையும் நெகிழ செய்துள்ளது.தனது வளர்ப்பு தாய்க்கு செல்போன் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கன்னிகாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in