The Indian Times

தூங்குடா கைப்புள்ள என தளபதி 66 படப்பிடிப்பில் தூங்கிய நடிகை ராஷ்மிக்கா

‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.பின்னர் இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.தற்போது தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தளபதி 66 ல் ஜோடியாக நடித்து வருகிறார்..இதனால் அனைத்து மொழி சினிமாக்களிலும் ரசிகர்களை திரட்டியுள்ளார் .தளபதி 66 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் நடிகை ராஷ்மிக்கா படப்பிடிப்பில் அயர்ந்து தூங்கும் வீடியோ வெளியாகி உள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.எவ்வளவு கியூட் ஆ ராஷ்மிக்கா தூங்குறாங்க என இவரது ரசிகர்கள் இதுலயும் கியூட் கண்டுபிடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in