The Indian Times

வருண் வீட்டிற்கே சென்று பழிக்கு பழி வாங்கிய அக்‌ஷரா, அழுகிய முட்டையை வீசி அலப்பறை | Akshara Reddy, Varun

வருணும், அக்‌ஷரா ரெட்டியும் பிக்பாஸில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான் என்று சொல்லி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஆனாலும் இவர்கள் வெளியில் அடிக்கடி சந்தித்து பேசுவது, எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, ஹோட்டல், Function என எல்லாவற்றிக்கும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அக்‌ஷரா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் வருண் என்னை வாக்கிங் செல்வதாக அழைத்து சென்று நடுரோட்டில் வைத்து ஹோலி என்ற பெயரில் கலர் அடித்து விட்டார் என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

Advertisement

மேலும் முட்டை, கலர் போன்றவற்றை அடித்ததால் தனது விலையுயர்ந்த காரும் நாஸ்தியாகி விட்டது என்றும், தனது மண்டை முழுவதும் கலராகி விட்டது என்றும் அவர் பதிவிட்டு இருந்தார். மேலும் அவன் ஒரு வீணாப்போனவன் பழிக்குப்பழி வாங்காமல் விட மாட்டேன் என்றும் சபதம் எடுத்து இருந்தார். பார்க்கவே காமெடியாக இருந்த அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து இருந்தார்கள். இன்று மீண்டும் அக்‌ஷரா ரெட்டி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வருண் வீட்டிற்கு செல்லும் முன் அழுகிய முட்டை, கலர் பொடி என அனைத்தையும் எடுத்துக் கொண்டு காரில் செல்கிறார். வருண் அண்ணனிடம் ஏற்கனவே பேசிவைத்துவிட்டு வருண் மீது முட்டை அடிக்க போவதாகவும் கூறினார். YouTube video code embed credits: Tamil Viral Videos 24×7

Advertisement

வருண் வீட்டிற்குள் வருவதற்கு முன்பே அழுகிய முட்டை, எண்ணெய், கலர் பொடி போன்றவற்றைப் போட்டு கலக்கி வைத்துக் கொண்டார். பின்னர் கதவின் பின்புறம் ஒளிந்து நின்று கொண்டு வருண் உள்ளே வந்தவுடன் அவர் தலையில் முட்டையை அடித்துவிட்டார். ஆனாலும் வருண் எஸ்கேப் ஆகி ஓடிவிட்டார். வருண் அக்‌ஷரா செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் பார்க்கவே மிகவும் க்யூட்டாக இருக்கும். அந்த வகையில் தற்போது அக்‌ஷரா வெளியிட்டுள்ள வீடியோவும் செம்ம க்யூட்டாக உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in